துபாய்,
14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.
இந்த நிலையில் சூப்பர்-4 சுற்றில் துபாயில் இன்று அரங்கேறும் முக்கியமான ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா (கேப்டன்), அம்பத்தி ராயுடு, டோனி, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா.
பாகிஸ்தான்: பஹார் ஜமான், இமாம் உல்-ஹக், பாபர் அசாம், சோயிப் மாலிக், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), ஆசிப் அலி, ஷதப் கான் அல்லது ஹாரிஸ் சோகைல், முகமது நவாஸ், ஷகீன் அப்ரிடி, ஹசன் அலி, உஸ்மான் கான்.