image courtesy: ICC 
கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: வங்காளதேச அணி அறிவிப்பு

வங்காளதேசம் -இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது.

தினத்தந்தி

சட்டோகிராம்,

இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இலங்கை கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை வங்காளதேசம் கைப்பற்றியது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி சிலேட்டில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்காளதேச கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்ட நஜ்மூல் ஹொசைன் சாண்டோவின் டெஸ்ட் கேப்டன்ஷிப் பயணம் இந்த தொடரில் இருந்துதான் ஆரம்பமாக உள்ளது.

வங்காளதேச அணி விவரம் பின்வருமாறு;-

நஜ்மூல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஜாகிர் ஹசன், மஹ்முதுல் ஹசன் ஜாய், ஷத்மன் இஸ்லாம், லிட்டன் தாஸ், மொமினுல் ஹக் ஷோராப், முஷ்பிகுர் ரஹீம், ஷஹாதத் ஹொசைன் திபு, மெஹிதி ஹசன் மிராஸ், நயீம் ஹசன், தைஜுல் இஸ்லாம், ஷோரிபுல் இஸ்லாம், சையத் கலீத் அகமது, முஷ்பிக் ஹசன், நஹித் ராணா.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்