கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

தினத்தந்தி

துபாய்,

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வரும் 24-ஆம் தேதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அதற்கு முன் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. அதன்படி இன்று இந்தியா முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஜானி பேர்ஸ்டோ அதிகபட்சமாக 49 ரன்கள் குவித்தார். இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடிய மொயீன் அலி 20 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார்.

இதனை தொடர்ந்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர்.

அதிரடியாக ஆடிய கேஎல் ராகுல் 24 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 46 பந்துகளில் 70 ரன்கள் குவித்த நிலையில் ரிட்டேட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

இறுதியில் இந்தியா அணி 19 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது. இதன் மூலம் முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்