கிரிக்கெட்

இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் உடல்நல குறைவால் காலமானார்

இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளரான சந்திரா நாயுடு தனது 88வது வயதில் உடல்நல குறைவால் காலமானார்.

இந்தூர்,

உலக கிரிக்கெட்டில் இந்தியாவை இடம் பெற செய்தவர்களில் முக்கியத்துவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர் சி.கே. நாயுடு. இவரது இளைய மகள் சந்திரா நாயுடு (வயது 88).

இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளரான இவர் கடந்த சில காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் அவர் நேற்று (ஞாயிற்று கிழமை) மதியம் காலமானார்.

இதனை அவரது சகோதரியின் மகன் விஜய் நாயுடு உறுதி செய்துள்ளார். இந்தூரில் உள்ள அரசு கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் வாய்ந்த சந்திரா, ஹோல்கர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

அந்த காலத்தில் பெண்கள் சல்வார் கமீஸ் அணிந்தபடி கிரிக்கெட் விளையாடியுள்ளனர். கிரிக்கெட் விளையாட்டில் கொண்ட ஆர்வத்தினால் பின்னாளில் சர்வதேச போட்டிக்கான இந்தியாவின் முதல் பெண் வர்ணனையாளரானார்.

கடந்த சில ஆண்டுகளாக பி.சி.சி.ஐ., சி.சி.ஐ. மற்றும் மத்திய பிரதேச கிரிக்கெட் கூட்டமைப்பின் பல்வேறு விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பித்து வந்துள்ளார். அவரது மறைவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் மத்திய பிரதேச கிரிக்கெட் கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் ஜக்டேல் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்