கோப்புப்படம் 
கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை பழிதீர்க்கும் முனைப்பில் ராஜஸ்தான்..!!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடுகிறது.

தினத்தந்தி

புனே,

8 ஆட்டங்களில் விளையாடி 5-ல் வெற்றி, 3-ல் தோல்வி என்று 10 புள்ளிகளுடன் உள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முந்தைய ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இந்த சீசனில் ஒரு அணியின் மோசமான ஸ்கோர் இது தான்.

விராட் கோலி தொடர்ந்து 2 ஆட்டங்களில் டக்-அவுட் ஆகி இருப்பது கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. இதே நிலை நீடித்தால் அவரது இடத்துக்கு ஆபத்து வந்து விடும் என்பதால் கூடுதல் கவனமுடன் ஆட வேண்டியது அவசியமாகும். இதே போல் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், கேப்டன் பிளிஸ்சிஸ், ஷபாஸ் அகமது உள்ளிட்டோரும் ரன்மழை பொழிந்தால் தான் எதிரணிக்கு கடும் சவால் அளிக்க முடியும்.

முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் எடுத்து பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. கொல்கத்தா, டெல்லி அணிகளுக்கு எதிராக தொடர்ந்து 200 ரன்களுக்கு மேல் குவித்து பிரமாதப்படுத்திய ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் உயிர்துடிப்பாக உள்ளார். 7 ஆட்டங்களில் 3 சதம், 2 அரைசதம் உள்பட 491 ரன்கள் திரட்டியுள்ள பட்லர் அதே உத்வேகத்துடன் வரிந்து கட்டுவார்.

அவர் தான் பெங்களூரு பவுலர்களின் பிரதான குறியாக இருப்பார். தேவ்தத் படிக்கல், ஹெட்மயர், கேப்டன் சஞ்சு சாம்சனும் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல் (18 விக்கெட்), அஸ்வின், டிரென்ட் பவுல்ட், பிரசித் கிருஷ்ணா மிரட்டுகிறார்கள். ஏற்கனவே தொடக்க லீக்கில் பெங்களூருவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ராஜஸ்தான் அணி அதற்கு பழிதீர்க்கும் வேட்கையுடன் ஆயத்தமாகிறது.

இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி விடும்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்