கிரிக்கெட்

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அரைஇறுதிக்கு தகுதி

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளது.

தினத்தந்தி

ஆன்டிகுவா,

14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த முதலாவது கால்இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 43.4 ஓவர்களில் 209 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. நடப்பு தொடரில் தொடர்ந்து 4-வது அரைசதம் அடித்த டிவால்ட் பிரேவிஸ் 97 ரன்கள் குவித்து கேட்ச் ஆனார். இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரீஹன் அகமது 4 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 31.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 212 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. அதிகபட்சமாக ஜேக்கப் பெத்தேல் 88 ரன்னும் (42 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்), வில்லியம் லக்ஸ்டன் ஆட்டம் இழக்காமல் 47 ரன்னும் விளாசினர். இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்