ஹாக்கி

கொரோனா பாதிப்பு பயண கட்டுப்பாடுகள்; போட்டிகளை ஒத்தி வைத்தது சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு

கொரோனா பாதிப்புக்கான பயண கட்டுப்பாடுகளால் மகளிர் மற்றும் ஆடவர் பிரிவு போட்டிகளை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு ஒத்தி வைத்துள்ளது.

தினத்தந்தி

லாசேன்,

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இடையே ஆடவர் ஹாக்கி போட்டிகள் இந்த வார இறுதியில் நடைபெற இருந்தன. இதேபோன்று அடுத்த ஆண்டு ஜனவரியில் சீனா மற்றும் பெல்ஜியம் நாட்டின் மகளிர் பிரிவு ஹாக்கி அணிகள் விளையாட இருந்தன.

எனினும், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் ஏற்படுத்திய அச்சுறுத்தலை முன்னிட்டு ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அதனால் தங்களால் போட்டிகளில் பங்கேற்க பயணிக்க முடியாது என அணிகள் வேண்டுகோள் விடுத்தன. இதனை ஏற்று சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு ஆனது ஹாக்கி புரோ லீக் போட்டிகளை ஒத்தி வைத்துள்ளது.

சர்வதேச சுகாதார சூழ்நிலையை தொடர்ந்து நாங்கள் உன்னிப்புடன் கண்காணித்து வருவோம். இதுபற்றிய ஆலோசனைக்கு பின்னர் போட்டிகளுக்கான புதிய தேதிகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்