Image Courtacy: AFP 
ஹாக்கி

காமல்வெல்த்: ஆக்கி போட்டியில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது இந்தியா

காமல்வெல்த் மகளிர் ஆக்கி போட்டியில் வேல்ஸ் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.

தினத்தந்தி

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தொடக்க விழா நேற்று முன் தினம் முடிவடைந்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் போட்டியின் இன்று இந்தியா- வேல்ஸ் அணிகளுக்கிடையே ஆக்கி போட்டி நடைபெற்றது. அதில் மகளிர் ஆக்கி பூல்-ஏ பிரிவில் நடந்த போட்டியில் வேல்ஸ் அணியை 3-1 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. இதன்மூலம் தொடர்ந்து இரண்டாவது வெற்றியை இந்திய மகளிர் அணி பதிவு செய்துள்ளது.

முன்னதாக 5-0 என்ற கோல் கணக்கில் கானா அணியை இந்திய மகளிர் அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்