டென்னிஸ்

இன்டியன்வெல்ஸ் டென்னிஸ் அரைஇறுதியில் நடால்-பெடரர்

இன்டியன்வெல்ஸ் டென்னிஸின் அரைஇறுதியில் நடால்-பெடரர் ஆகியோர் மோத உள்ளனர்.

தினத்தந்தி

இன்டியன்வெல்ஸ்,

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), 60-ம் நிலை வீராங்கனையான பியான்கா ஆன்ட்ரீஸ்குவை (கனடா) எதிர்கொண்டார். 2 மணி 12 நிமிட நேரம் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 18 வயதான பியான்கா ஆன்ட்ரீஸ்கு 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இதன் மூலம் வைல்டு கார்டு வாய்ப்பு மூலம் பங்கேற்று இன்டியன்வெல்ஸ் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையை பியான்கா ஆன்ட்ரீஸ்கு பெற்றார். பியான்கா கால்இறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கார்பின் முகுருஜாவை (ஸ்பெயின்) வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-4, 6-2 என்ற நேர்செட்டில் 23-ம் நிலை வீராங்கனையான பெலின்டா பென்சிச்சை (சுவிட்சர்லாந்து) சாய்த்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதிப்போட்டியில் ஏஞ்சலிக் கெர்பர்-பியான்கா ஆன்ட்ரீஸ்கு பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரபெல் நடால் (ஸ்பெயின்), 13-ம் நிலை வீரரான கரன் கச்சனோவை (ரஷியா) எதிர்கொண்டார். பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் 7-6 (7-2), 7-6 (7-2) என்ற நேர்செட்டில் கரன் கச்சனோவை போராடி வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். ரபெல் நடால் 2-வது செட்டில் முழங்காலில் ஏற்பட்ட வலிக்கு சிகிச்சை பெற்றபடி விளையாடினார்.

மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-4, 6-4 என்ற நேர்செட்டில் போலந்து வீரர் ஹூபர்ட் ஹர்காக்சை தோற்கடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். அரைஇறுதி ஆட்டத்தில் ரோஜர் பெடரர்-ரபெல் நடால் மோதுகிறார்கள்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்