சினிமா துளிகள்

இணையத்தை கலக்கும் நஸ்ரியா படத்தின் டீசர்

நீண்ட இடைவேளைக்கு பிறகு நஸ்ரியா நடிக்கும் 'அடடே சுந்தரா' திரைப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

நடிகை நஸ்ரியா, 8 வருடங்களுக்கு பிறகு, தற்போது மீண்டும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு 'அடடே சுந்தரா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நானி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த படம் தயாராகிறது.

நானி ஏற்கனவே தமிழில் வெப்பம், நான் ஈ ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகராகவும் இருக்கிறார். அடடே சுந்தரா திரைப்படத்தை இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இருவேறு மதங்களைச் சேர்ந்த நானியும் நஸ்ரியாவும் காதலிப்பது போன்று படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்