இதுபற்றி அவர் கூறுகிறார்:-
வன்கொடுமை தடுப்பு சட்டம் பற்றி பேசும் படமாக ருத்ரதாண்டவம் உருவாகி இருக்கிறது. இதில் ரிசி ரிச்சர்டு போலீஸ் அதிகாரியாகவும், தர்சா குப்தா அவருடைய மனைவியாகவும், ராதாரவி வக்கீலாகவும், கவுதம் வாசுதேவ் மேனன் வில்லனாகவும் நடித்து இருக்கிறார்கள். மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடித்த தீபா, ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்கள் பங்கேற்கும் கதையுடன், போதை மருந்து பற்றிய ஒரு கிளை கதையும் இடம்பெறுகிறது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து டிரெண்டிங்கில் உள்ளது.