டி.என்.பி.எஸ்.சி குருப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு - விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி குருப்-1
Published on

சென்னை,

டி.என்.பி.எஸ்.சி குருப்-1 ற்கான முதல்நிலை தேர்விற்கு டி.என்.பி.எஸ்.சிகுருப் 1 (TNPSC-GROUP-I Prelims) இலவச பயிற்சி வகுப்புகள் 01-06-2026 முதல் (திங்கள் முதல் வெள்ளி வரை) நடத்தப்படவுள்ளது சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தகவல்.

டி.என்.பி.எஸ்.சி குருப்-1 ற்கான முதல்நிலை தேர்விற்கு (TNPSC-GROUP-I Prelims) இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் 01-06-2026 முதல் (திங்கள் முதல் வெள்ளி வரை) நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை-32. கிண்டியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலை நாட்களில் அணுகுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றார்கள்.

மேலும், விவரங்களுக்கு. decgcguindy@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

https://forms.qle/9FX7qfSJhstpwtrc9 கூகுள் படிவத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள், இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார்.

tnpsc
X

Daily Thanthi
www.dailythanthi.com