புதுச்சேரி

45 மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்

புதுச்சேரி அரசு சமூக நலத்துறை மற்றும் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் அளித்தல் துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

அரியாங்குப்பம்

புதுச்சேரி அரசு சமூக நலத்துறை மற்றும் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் அளித்தல் துறை சார்பாக மணவெளி தொகுதியை சேர்ந்த 45 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, காது கேட்கும் கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தவளக்குப்பத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், கிருஷ்ணமூர்த்தி, தவளக்குப்பம் கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் மோடி இன்று வரும் நிலையில் சீக்கிய அமைப்புக்கு வெடிகுண்டு மிரட்டல்

இன்று பட்ஜெட் தாக்கல்: மாநில அரசுகள் பதற்றத்துடன் காத்திருக்கின்றன - காங்கிரஸ்

ஐ.ஜி. அந்தஸ்து பெற 2 ஆண்டுகள் மத்திய பணி கட்டாயம் - மத்திய அரசு உத்தரவு

வாக்கு வங்கிக்காக ஊடுருவல்காரர்களுக்கு மம்தா அரசு அடைக்கலம் அளிக்கிறது - அமித்ஷா குற்றச்சாட்டு

மராட்டிய துணை முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள சுனேத்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து