காரைக்கால்
புதுச்சேரி அரசின் நில அளவை அலுவலகம், பதிவேடுத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டிரோன் மூலம் நிலஅளவீடு செய்யப்பட்டது. அளவீடு பணிகள் முடிந்ததை தொடர்ந்து சொத்து அடையாள அட்டை தயாரிக்கும் பணிகள் நடந்து வந்தது. அது நிறைவு பெற்றதையொட்டி முதல்கட்டமாக, நெடுங்காடு தொகுதியை சேர்ந்த 163 பயனாளிகளுக்கு சொத்து அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கி பயனாளிகளுக்கு சொத்து அடையாள அட்டையை வழங்கினார்.