தங்கம்

ஒரே நாளில் 2-வது முறையாக குறைந்த வெள்ளி விலை... நிலவரம் என்ன..?

வெள்ளி விலை இன்று காலையில் கிராமுக்கு ரூ.55 குறைந்த நிலையில், பிற்பகலில் மேலும் குறைந்துள்ளது.

சென்னை,

தங்கம், வெள்ளி விலை ‘கிடுகிடு'வென ஏறுவது, பின்னர் ‘மளமள'வென சரிவது என கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி வருகிறது. அந்த வகையில் தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.1,190-ம், சவரனுக்கு ரூ.9,520-ம் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,34,400 என்ற இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது. வெள்ளி விலையும் நேற்று முன்தினம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ரூ.425-க்கு விற்கப்பட்டது. இதுவும் வரலாறு காணாத உச்சமாக பார்க்கப்பட்டது.

நேற்று முன்தினம் அதிரடியாக ஏற்றம் கண்ட தங்கம், வெள்ளி விலை, நேற்று எந்த வேகத்தில் ஏறியதோ, அதே வேகத்தில் இறங்கியது. அதன்படி, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7,600-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.15,850-க்கும், ஒரு சவரன் ரூ.1,26,800-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.405-க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் சரிந்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7,600-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.14,900-க்கும், ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.55-ம், கிலோவுக்கு ரூ.55 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.350-க்கும், ஒரு கிலோ ரூ.3,50,000-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் வெள்ளி விலை 2-வது முறையாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் வெள்ளி விலை பிற்பகலில் கிராமுக்கு ரூ.30-ம், கிலோவுக்கு ரூ.30 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.320-க்கும், ஒரு கிலோ ரூ.3,20,000-க்கும் விற்பனையாகி வருகிறது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.85 ஆயிரம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலையில் பிற்பகலில் மாற்றம் இல்லை.

மராட்டிய துணை முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள சுனேத்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மராட்டிய துணை முதல் மந்திரியாக அஜித் பவார் மனைவி பதவியேற்பு

மத்திய பட்ஜெட்; முக்கிய சலுகைகள் அறிவிக்கப்படுமா?

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் கைது

லஞ்சம் வாங்கும்போது கைது... குழந்தை போல் அலறி ஆர்ப்பாட்டம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்