தமிழக செய்திகள்

உடைந்த ஸ்டியரிங்குடன் இயக்கப்படும் அரசுப் பேருந்து? - தமிழக அரசு விளக்கம்

சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல என்று தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்து உடைந்த ஸ்டியரிங்குடன் இயக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. இந்த நிலையில் அந்த புகைப்படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல. சீனாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்து உடைந்த ஸ்டியரிங்குடன் இயக்கப்படுவதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறான தகவல். சீன ஓட்டுநர் உடைந்த ஸ்டியரிங்குடன் பேருந்து இயக்கியதாகக் கடந்த 2009ம் ஆண்டு முதல் இப்புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. இதனைத் தமிழ்நாடு அரசு பேருந்து எனத் தவறாகப் பரப்புகின்றனர். வதந்தியைப் பரப்பாதீர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மராட்டிய துணை முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள சுனேத்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மராட்டிய துணை முதல் மந்திரியாக அஜித் பவார் மனைவி பதவியேற்பு

மத்திய பட்ஜெட்; முக்கிய சலுகைகள் அறிவிக்கப்படுமா?

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் கைது

லஞ்சம் வாங்கும்போது கைது... குழந்தை போல் அலறி ஆர்ப்பாட்டம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்