காரைக்கால்,
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நேற்று புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அன்னை தெரசா அரசு பள்ளிக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு, மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பள்ளியில் மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மாணவர்கள் தாங்கள் தயாரித்த பொருட்களை அவருக்கு பரிசாக வழங்கினர். தொடர்ந்து வகுப்பறைக்கு சென்ற தமிழிசை சவுந்தரராஜன், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், கொரோனா ஊரடங்குக்கு பிறகு அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.