புதுச்சேரி

ரூ.12 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி

வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட ஒதியம்பட்டு பகுதியில் ரூ.12 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

வில்லியனூர்

வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட ஒதியம்பட்டு ரமேஷ் நகர், ரங்கசாமி நகர், வி.மணவௌ கிராமத்தில் மணக்குள விநாயகர் நகரில் மொத்தம் ரூ.11 லட்சத்து 77 ஆயிரம் செலவில் மண்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சாய்.சரவணன்குமார், தொகுதி எம்.எல்.ஏ.வும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா ஆகியோர் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்குமார், பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை கோட்டப்பிரிவு செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலக உதவிப்பொறியாளர் ராமன், மணவௌ தர்மராஜ், சபாபதி, தட்சிணாமூர்த்தி, பாலகுரு, ஹரி, வாசுதேவன், கலியபெருமாள், சுப்புராயன், முருகன், ஒதியம்பட்டு மூர்த்தி, வேலவன், கந்தன், விசு, ஏழுமலை மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மராட்டிய துணை முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள சுனேத்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மராட்டிய துணை முதல் மந்திரியாக அஜித் பவார் மனைவி பதவியேற்பு

மத்திய பட்ஜெட்; முக்கிய சலுகைகள் அறிவிக்கப்படுமா?

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் கைது

லஞ்சம் வாங்கும்போது கைது... குழந்தை போல் அலறி ஆர்ப்பாட்டம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்