சினிமா செய்திகள்

நடிகை நிவேதிதாவுக்கு செக்ஸ் தொல்லை + "||" + actress Nivedita harassment

நடிகை நிவேதிதாவுக்கு செக்ஸ் தொல்லை

நடிகை நிவேதிதாவுக்கு செக்ஸ் தொல்லை
பிரபல கன்னட நடிகை நிவேதிதா. இவர் தமிழில் போர்க்களம், கதை, மார்க்கண்டேயன் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.
பெங்களூரு,

பிரபல கன்னட நடிகை நிவேதிதா. இவர் தமிழில் போர்க்களம், கதை, மார்க்கண்டேயன் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். நிவேதிதாவுக்கும் பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் கோவாவுக்கு செல்ல முடிவு எடுத்தனர். காதலரால் உடனடியாக புறப்பட முடியாத நிலை ஏற்பட்டதால் இரண்டு நாட்கள் கழித்து வரும்படி அவரிடம் கூறிவிட்டு நிவேதிதா தனியாக கோவா சென்றார்.


அங்குள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினார். இரவு 9 மணிக்கு கடற்கரையை சுற்றி பார்க்க கிளம்பினார். கடற்கரையில் தனியாக நடந்து சென்ற நிவேதிதாவை குடிபோதையில் இருந்த சில ஆசாமிகள் நோட்டம் விட்டனர். அவர்கள் பின்தொடர்ந்து சென்று கையை பிடித்து இழுத்து செக்ஸ் தொல்லை கொடுத்தனர். ஆபாசமாக பேசியும் கேலி செய்தார்கள்.

அவர்கள் பிடியில் இருந்து தப்பி ஓடிய நிவேதிதா அருகில் இருந்த சிறிய ஓட்டலுக்குள் நுழைந்தார். அங்கும் சிலர் குடிபோதையில் தங்கள் அருகில் வந்து உட்காருமாறு அழைத்து தொல்லை கொடுத்தார்கள். அவர்களிடம் இருந்தும் நிவேதிதா தப்பி ஓடினார். காதலருக்கு போன் செய்து வரவழைத்து உடனேயே கோவாவில் இருந்து கிளம்பி விட்டார். பெங்களூரு திரும்பிய அவர் கோவாவில் மோசமான அனுபவங்களை சந்தித்தேன் என்று மிரட்சியோடு கூறினார்.