தேசிய செய்திகள்

சொகுசு கார் வரி ஏய்ப்பு வழக்கு நடிகை அமலா பாலுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவு + "||" + The Kerala High Court ordered the actress Amala Paul

சொகுசு கார் வரி ஏய்ப்பு வழக்கு நடிகை அமலா பாலுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவு

சொகுசு கார் வரி ஏய்ப்பு வழக்கு நடிகை அமலா பாலுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவு
கேரளாவில், ரூ.20 லட்சத்துக்கு மேல் மதிப்புடைய சொகுசு கார்களை பதிவு செய்ய 20 சதவீதம் மோட்டார் வாகன வரி செலுத்த வேண்டும்.

கொச்சி,

பிரபல நடிகை அமலா பால் இந்த வரியை தவிர்ப்பதற்காக, புதுச்சேரியில் வசிப்பதுபோல் போலி ஆவணங்களை கொடுத்து, புதுச்சேரியில் தனது சொகுசு காரை பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே, வரி ஏய்ப்பு செய்ததாக அமலா பால் மீது கேரள மாநில குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக, முன்ஜாமீன் கோரி, கேரள ஐகோர்ட்டில் அமலா பால் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு, நீதிபதி ராஜா விஜயராகவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தை விசாரிக்கும் மாநில குற்றப்பிரிவு போலீஸ் முன்பு, வருகிற 15–ந் தேதி அமலா பால் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.