சினிமா செய்திகள்

ராம்கோபால் வர்மா-ஆபாச பட நடிகை மியா மல்கோவா ஆபாச பட டிரைலர் வெளியீடு + "||" + God, Sex and Truth trailer: Adult star Mia Malkova explains her feminism in RGVs film

ராம்கோபால் வர்மா-ஆபாச பட நடிகை மியா மல்கோவா ஆபாச பட டிரைலர் வெளியீடு

ராம்கோபால் வர்மா-ஆபாச பட நடிகை மியா மல்கோவா ஆபாச பட டிரைலர்  வெளியீடு
ராம்கோபால் வர்மா இயக்கிய ஆபாச பட நடிகை மியா மல்கோவா ஆபாச பட டிரைலர் வெளியிடப்பட்டது.

இந்தி பட இயக்குனர் ராம்கோபால் வர்மா சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்துபவர்

ரஜினி, பவன் கல்யான் உள்பட பெரிய நடிகர்கள் அனைவரையும் வம்புக்கு இழுப்பார். வாழ்த்தும் தெரிவிப்பார். சமூக வலைத்தளங்களில் முக்கிய நடிகர், நடிகைகளையும், திரை உலக பிரச்சினைகளையும் விமர்சனம் செய்து தன்னை முக்கியமானவராக காட்டிக் கொள்வார். இதனால் தன்னை  பற்றி வரும் கடும் விமர்சனங்களை கண்டு கொள்ள மாட்டார்.

ராம்கோபால் வர்மா தற்போது, ‘காட் செக்ஸ் அண்ட் ட்ரூத்’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இதில் அமெரிக்காவின் பிரபல ஆபாச பட நடிகை மியா மல்கோவா நடித்திருக்கிறார். இந்த படத்துக்கான போஸ்டரை அவர் வெளியிட்டுள்ளார். அதில் மியா மல்கோவா நிர்வாணமாக காட்சியளிக்கிறார். வெளிநாட்டில் ராம்கோபால்வர்மா படப்பிடிப்பு நடத்தும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘சன்னி லியோனுக்கு பிறகு இரண்டாவது ஆபாச பட நடிகையாக இந்திய இயக்குனரின் படத்தில் நடிக்கிறேன்’ என்று மியா மல்கோவா அதில் குறிப்பிட்டு இருக்கிறார். ராம்கோபால்வர்மாவும் இது போன்ற ஆபாச படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

காட் செக்ஸ் அண்ட் ட்ரூத்  படத்தின் டிரைலர் இன்று வெளியிடபட்டது.

டிரைலர் பார்க்க

#RGV | #MiaMalkova | #GodSexTruth | #RamGopalVarma |