பக்கவாதம் பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி


பக்கவாதம்  பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 24 Jan 2018 8:13 AM GMT (Updated: 2018-01-24T13:43:16+05:30)

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். #Malayalamactor #Sreenivasan

கொச்சி

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன்( வயது 61) . நடிகர், திரைக்கதை ஆசிரியர்  இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் என பல்வேறு முகங்களை கொண்டவர் .
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். 50 படங்களுக்கு மேல் கதை திரைக்கதை எழுதி உள்ளார்.

நேற்று அவருக்கு திடீர் என பக்கவாதம் ஏற்பட்டது  உடனடியாக அவர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்து உள்ளது. மருத்துவமனை சார்பில் தெரிவிக்கபட்ட தகவலில்  அவர் அவசர சிகிச்சை பிரிவில், வைத்து கண்காணிக்கபட்டு வருவதாகவும் தற்போது அவரது  உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

Next Story