சினிமா செய்திகள்

இளம் பெண்ணின் கண்ணசைவாலும் சிரிப்பாலும் இணையதளத்தில் வைரலான வீடியோ + "||" + Oru Adaar Love actor Priya Prakash Varrier creates havoc on social media!

இளம் பெண்ணின் கண்ணசைவாலும் சிரிப்பாலும் இணையதளத்தில் வைரலான வீடியோ

இளம் பெண்ணின் கண்ணசைவாலும் சிரிப்பாலும் இணையதளத்தில் வைரலான வீடியோ
இளம் பெண்ணின் கண்ணசைவாலும் சிரிப்பாலும் இணையதளத்தில் வைரலான ஜிமிக்கி கம்மல் போல் மற்றொரு வீடியோ #OruAdaarLove #PriyaPrakash
திருவனந்தபுரம்

 இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஜிமிக்கு கம்மல் பாடலுக்கு ஆடிய நடனம் 2017-ம் ஆண்டில் யூடியூப்  டிரெண்டிங்கில் இரண்டாம் இடம் பிடித்தது. சமூக வலைதளத்தில் வரவேற்பைப் பெற்ற பாடல் 'ஜிமிக்கி கம்மல்'. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'Velipadinte Pusthakam' படத்தில் இடம்பெற்றிருந்தது. இதற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு கொச்சியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆடிய நடனம் கடந்த ஆகஸ்ட் மாதம் யூடியுப் தளத்தில் பதிவேற்றப்பட்டது முதல், அது இந்திய அளவில் பிரபலமானது.

தற்போதுவரை இந்த வீடியோவை 18 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இது போல் மற்றொரு வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகி உள்ளது.

இன்று பிப்ரவரி 12, 'கட்டிப்பிடி தினம்'. காதலர் வாரத்திற்காக   மார்க்கெட்டிங் ஜிமிக்கு கம்மல் போல் ,ஒரு பாடல்  யுடியூப்பில் வெளியிடபட்டு உள்ளது.

பிப்ரவரி 9 அன்று, 'காதலர் தினம்' இந்த காதலர் வாரம் அட்டவணை படி  ஒரு ஆதார் லவ் என்ற படத்திற்காக    எடுக்கபட்ட மாணிக்ய மலரேயா பூவி என்ற பாடல் யுடியூபில் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த பாடலுக்கும் ஷான் ரஹ்மான் இசை அமைத்து உள்ளார். நடிகர்-தயாரிப்பாளர்-இயக்குனர் வினீத் ஸ்ரீனிவாசன் பாடி உள்ளார் ஜிமிக்கி கம்மல் பாடலையும் இவரே பாடினார்.

இந்த பாடலை விட இந்த பாடலில் நடித்து உள்ள  பிரியா பிரகாஷ் வாரியரின் கண் அசைவே இப்போது இந்த வீடியோ வைரலாக காரணமாகும். 

இந்த படத்தில் பிரியா சிறிய  வேடத்தில் நடித்து உள்ளார். பிரியாவின் திறமையை கண்டு அவருக்கு இந்த படத்தில்  காட்சிகளை அதிகபடுத்தி உள்ளார் இயக்குனர்.

18 வயதாகும் பிரியாவுக்கு கேரளா திருச்சூர் சொந்த ஊராகும்.  இவர் மோகினியாட்ட கலைஞராவார்.