சினிமா செய்திகள்

கடந்த ஒருவார கூகுள் தேடலில் சன்னி லியோன்,மற்றும் பிரியங்கா சோப்ரா அடுத்த இடத்தில் பிரியா வாரியர் + "||" + Priya Prakash Varrier beats Sunny Leone, Alia Bhatt, Katrina Kaif on Google search trend 2018

கடந்த ஒருவார கூகுள் தேடலில் சன்னி லியோன்,மற்றும் பிரியங்கா சோப்ரா அடுத்த இடத்தில் பிரியா வாரியர்

கடந்த ஒருவார கூகுள் தேடலில் சன்னி லியோன்,மற்றும் பிரியங்கா சோப்ரா  அடுத்த இடத்தில் பிரியா வாரியர்
கூகுள் தேடலில் சன்னி லியோன், கத்ரீனா கைப் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோரை அடுத்து அதிகம் தேடப்பட்டவர் பட்டியலில் பிரியா வாரியர். #PriyaPrakashVarrier
திருவனந்தபுரம் 

மலையாளத்தில் ‘ஒரு அடார் லவ்;  என்ற படத்திற்காக   எடுக்கபட்ட மாணிக்ய மலரேயா பூவி என்ற பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டு உள்ளது. ஒமர் லுலு இயக்கத்தில்  ஒரு அடார் லவ்' படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். 

இந்த பாடலுக்கும் ஷான் ரஹ்மான் இசை அமைத்து உள்ளார். நடிகர்-தயாரிப்பாளர் - இயக்குனர் வினீத் ஸ்ரீனிவாசன் பாடி உள்ளார்.

இந்த பாடலை விட இந்த பாடலில் நடித்து உள்ள  பிரியா பிரகாஷ் வாரியரின் கண் அசைவே இப்போது இந்த வீடியோ வைரலாக காரணமாகும். 

இந்த படத்தில் பிரியா சிறிய  வேடத்தில் நடித்து உள்ளார். பிரியாவின் திறமையை கண்டு அவருக்கு இந்த படத்தில்  காட்சிகளை அதிகபடுத்தி உள்ளார் இயக்குனர்.

18 வயதாகும் பிரியாவுக்கு கேரளா திருச்சூர் சொந்த ஊராகும்.  இவர் மோகினியாட்ட கலைஞராவார்.

ஒரே வீடியோவில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார் பிரியா வாரியர். 'ஒரு அடார் லவ்' படத்தில் வரும் பாடலில் கண்களால் பிரியா வாரியர் காட்டிய எக்ஸ்பிரஷன் இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளது. இதனால் அவரது இன்ஸ்டாகிராம் வீடியோ அப்லோடு செய்த 24 மணி நேரத்தில்  6 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்களை பெற்றது.  கேரளா மட்டும் இன்றி நாடு முழுவதும் ஒரே நாளில் பிரபலமாகிவிட்டார் பிரியா வாரியர்.

தற்போது கூகுள் தேடலில் பிரபலமாகி உள்ளார் பாலிவுட் நடிகைகள் சன்னி லியோன், கத்ரீனா கைப் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோரை அடுத்து அதிகம் தேடப்பட்டவர் பிரியா வாரியர்தான்.

கடந்த 7 நாட்கள் ஆய்வு படி கூகுளில் அதிகம் தேடபட்டவர்களில் பிரியா வாரியார்  உள்ளார்.

யூடியூப் தேடலில் பிரியா வாரியர்  முன்னிலையில் உள்ளார்.