சினிமா செய்திகள்

வாழ்க்கையில் நிறைய மாற்றம் என்கிறார், நடிகை தமன்னா + "||" + Life changes in life, says actress Tamanna

வாழ்க்கையில் நிறைய மாற்றம் என்கிறார், நடிகை தமன்னா

வாழ்க்கையில் நிறைய மாற்றம் என்கிறார், நடிகை தமன்னா
எனது வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன, என்கிறார் நடிகை தமன்னா.
விக்ரம் ஜோடியாக தமன்னா நடித்த ‘ஸ்கெட்ச்’ படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. தற்போது 3 தெலுங்கு படங்களிலும் ஒரு இந்தி படத்திலும் நடிக்கிறார். தமிழ் படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். வெற்றி-தோல்விகள் குறித்து தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-

“சினிமாவில் வெற்றி தோல்விகள் சகஜமானது. ஆனால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பது என்பது முக்கியம். சினிமாவுக்கு வந்த புதிதில் படங்கள் தோற்றால் அதற்கு நான்தான் காரணம் என்று நினைப்பேன். வெற்றி பெற்றால் அதை மற்றவர்கள் கொண்டாடுவார்கள். தோல்விக்கு நான் பொறுப்பு ஏற்றது எனக்கு தன்னம்பிக்கையை இழக்க செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

அதனால் மனதுக்கும் சங்கடமாக இருந்தது. ஆனால் இப்போது அதில் இருந்து மீண்டு விட்டேன். படங்கள் வெற்றிக்கு நான்தான் காரணம் என்று நினைக்கிறேன். அவரவர் வெற்றிக்கு அவரவர்தான் காரணம் என்று உணர்கிறேன். இது எனக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த எண்ணம் எல்லோருக்கும் வர வேண்டும். படங்கள் வெற்றி பெறும்போது வெற்றிக்கு நான்தான் காரணம் என்று பெருமைப்படுங்கள். இதன் மூலம் உங்களை நீங்களே காதலிக்க ஆரம்பிப்பீர்கள். இப்போதெல்லாம் வெற்றிக்கு நான்தான் காரணம் என்ற நினைப்போடு என்னை நானே நேசிக்க தொடங்கி இருக்கிறேன். வெற்றியை அனுபவிக்கிறேன். அந்த மகிழ்ச்சியில் மூழ்கி திளைக்கிறேன்.

இந்த உணர்வு வந்த பிறகு எனது வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. நேர்மறை சிந்தனைகள் உருவாகி உள்ளன. எதிர்மறை சிந்தனைகள் அகன்று விட்டன.”

இவ்வாறு தமன்னா கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. பட உலகில் பாலியல் தொல்லையா? தமன்னா விளக்கம்
சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லைகளை நடிகைகள் ‘மீ டூ’ வில் பகிர்ந்து வருகிறார்கள். இந்தி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இதில் சிக்கி உள்ளனர்.