சினிமா செய்திகள்

“நடிகைகள் சம்பாதிக்கும் பணம் அழகுக்கான செலவில் கரைகிறது”-ராதிகா ஆப்தே + "||" + "Money earned by actresses Cosmetic spills " - Radhika Apte

“நடிகைகள் சம்பாதிக்கும் பணம் அழகுக்கான செலவில் கரைகிறது”-ராதிகா ஆப்தே

“நடிகைகள் சம்பாதிக்கும் பணம் அழகுக்கான செலவில் கரைகிறது”-ராதிகா ஆப்தே
ரஜினிகாந்த் ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராதிகா ஆப்தே இந்தி படங்களில் பிசியாக இருக்கிறார்.
ஜினிகாந்த் ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராதிகா ஆப்தே இந்தி படங்களில் பிசியாக இருக்கிறார். தற்போது. அவர் கைவசம் 7 படங்கள் உள்ளன. இவை அனைத்தும இந்த வருடமே திரைக்கு வர இருக்கின்றன. இந்த நிலையில் ராதிகா ஆப்தேவின் ஆபாச படங்கள் இணையதளங்களில் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன. அதிக படங்கள் குவிவது, கவர்ச்சிக்காக கூடுதல் சம்பளம் கேட்பது என்று ராதிகா ஆப்தே கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாக இந்தி பட உலகில் கிசுகிசுக்களும் பரவி உள்ளன.


இதுகுறித்து ராதிகா ஆப்தே அளித்த பேட்டி வருமாறு:

“நான் அதிகமாக சம்பாதிக்கிறேன் என்றும், கைவசமும் நிறைய படங்கள் வைத்து இருக்கிறேன் என்றும் பலரும் பேசுவதை என்னால் கேட்க முடிகிறது. மற்றவர்கள் நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்லை. நடிகைகளுக்கு சினிமாவில் நடிப்பது என்பது விலை உயர்ந்த தொழில் என்றுதான் சொல்ல முடியும்.

எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அதே அளவுக்கு செலவும் இருக்கும். அழகை காப்பாற்றிக் கொள்வதில் ஆரம்பித்து அவர்கள் இருக்கிற அந்த இடத்துக்கு ஏற்ற மாதிரி உடைகள் அணிவது, அழகு சாதன பொருட்கள் வாங்கி பயன்படுத்துவது என்று அதிகமான பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

வெளியில் இருந்து பார்க்கிறவர்களுக்கு இதுவெல்லாம் தெரியாது. பணம் இப்படி கையில் வந்தால் அப்படி போய்ட்டே இருக்கும். சமீபகாலமாக சினிமாவில் பாலியல் தொல்லைகள் குறித்து பேசப்படுகிறது. இதுகுறித்து ஏற்கனவே விளக்கமாக கூறிவிட்டேன். பாதிக்கப்படும் பெண்கள் தைரியமாக அதை வெளியே சொல்ல முன்வர வேண்டும். எனக்கு அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.”

இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.