சினிமா செய்திகள்

கண்ணடிக்கும் காட்சியால் பிரபலம் சம்பளத்தை உயர்த்திய பிரியா வாரியர் + "||" + The popularity of the spectacular view Priya Warrior who raised salaries

கண்ணடிக்கும் காட்சியால் பிரபலம் சம்பளத்தை உயர்த்திய பிரியா வாரியர்

கண்ணடிக்கும் காட்சியால் பிரபலம் சம்பளத்தை உயர்த்திய பிரியா வாரியர்
ஒரு பாடல் காட்சியிலேயே தேசிய அளவில் பிரபலமாகி உள்ளார் மலையாள நடிகை பிரியா வாரியர்.
ரு பாடல் காட்சியிலேயே தேசிய அளவில் பிரபலமாகி உள்ளார் மலையாள நடிகை பிரியா வாரியர். ‘ஒரு அடார் லல்’ படத்தில் மாணிக்க மலராய பூவி பாடலில் பள்ளி சீருடையில் சக மாணவனை பார்த்து புருவத்தை நெரித்து கண்ணடிப்பது போன்று அவர் நடித்துள்ள காட்சி இணையதள உலகை பரபரப்பாக்கி இருக்கிறது.


இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் பரவி டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் பிரியா வாரியரை பின்தொடர்வோர் எண்ணிக்கையை லட்சக்கணக்கில் உயர்ந்து உள்ளது. இணையதளத்தில் தேடப்படுவோர் பட்டியலில் நடிகைகள் சன்னி லியோன், கத்ரினா கைப் உள்ளிட்டோரை அவர் பின்னுக்கு தள்ளி விட்டார். யுடியூப்பில் பிரியா வாரியர் பாடல் காட்சியை பார்த்தவர்கள் எண்ணிக்கை 1.60 கோடியை தாண்டி இருக்கிறது.

ஒரு அடார் லவ் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட தயாரிப்பாளர்கள் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் கேரளாவில் முகாமிட்டு டப்பிங் உரிமைக்கு விலை பேசி வருகிறார்கள். தெலுங்கு மொழியில் வெளியிடும் உரிமைக்கு மட்டும் ஒரு அடார் லவ் படக்குழுவினர் ரூ.2 கோடி விலை பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழுக்கும் அதே தொகையை கேட்பதாக கூறப்படுகிறது.

பிரியா வாரியருக்கு தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவும் அழைப்பு வருகிறது. இந்த நிலையில் சம்பளத்தை பிரியா வாரியர் உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கில் தயாராகும் புதிய படமொன்றில் நிகில் சித்தார்த் ஜோடியாக நடிக்க பிரியா வாரியரிடம் பேசியதாகவும் அதற்கு அவர் ரூ.1.50 கோடி சம்பளம் கேட்டு படக்குழுவினரை அதிர்ச்சியாக்கியதாகவும் தெலுங்கு பட உலகில் கிசுகிசு பரவி உள்ளது. ஒரு அடார் லவ் படத்துக்கு பிரியா வாரியர் ரூ.7 லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.