சினிமா செய்திகள்

நடிகை பிரீத்தி ஜிந்தாவை தாக்கியதற்கு ஆதாரம் தாக்கல் + "||" + Submit evidence that actress Preeti Zinta was attacked

நடிகை பிரீத்தி ஜிந்தாவை தாக்கியதற்கு ஆதாரம் தாக்கல்

நடிகை பிரீத்தி ஜிந்தாவை தாக்கியதற்கு ஆதாரம் தாக்கல்
நெஸ்வாடியா திட்டியதாக பிரீத்தி ஜிந்தா குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
பிரபல இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா. இவரும் தொழில் அதிபர் நெஸ்வாடியாவும் காதலித்தனர். இருவரும் ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களாகவும் உள்ளனர். பின்னர் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலை முறித்து தனித்தனியே பிரிந்து சென்றுவிட்டார்கள்.


இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் கிரிக்கெட் மைதானத்தில் நெஸ்வாடியா தனது கையை பிடித்து இழுத்து அசிங்கமாக திட்டியதாக பிரீத்தி ஜிந்தா குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். கையை நெரித்து காயம் ஏற்படுத்தியதாகவும் கூறினார். இது குறித்து போலீசிலும் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த நிலையில் 4 வருடங்களுக்கு பிறகு இந்த வழக்கில் போலீசார் 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 554, 506, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்குக்கு ஆதாரமாக கையை இழுத்து காயம் ஏற்படுத்திய புகைப்படத்தையும் பிரீத்தி ஜிந்தா போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...