ஸ்ரீதேவியின் வாழ்க்கைத் துளிகள்


ஸ்ரீதேவியின் வாழ்க்கைத் துளிகள்
x
தினத்தந்தி 25 Feb 2018 10:00 PM GMT (Updated: 26 Feb 2018 5:02 AM GMT)

அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதல் படம் துணைவன். #RIPSridevi #SriDevi

* எம்.ஜி.ஆருடன் நம்நாடு, சிவாஜி கணேசனுடன் பாபு, வசந்த மாளிகை படங்களில் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதல் படம் துணைவன். 1967-ல் இந்த படம் வெளிவந்தது.

* தமிழில் வெளியான நீயா? படம் இந்தியில் நாகினா என்ற பெயரில் தயாரானபோது அதில் பாம்பாக மாறும் பெண் வேடத்தில் நடித்து இருந்தார். அதில் அவர் ஆடிய பாம்பு நடனம் இந்தி பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.

* பகலில் ஒரு இரவு படத்தில் இளமை எனும் பூங்காற்று பாடலில் கவர்ச்சியாக நடித்து அந்த காலத்து இளைஞர்களின் தூக்கத்தை தொலைத்து இருந்தார்.

* 1985-ல் பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தியுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். ஸ்ரீதேவியின் தாய் ராஜேஸ்வரி உடல் நலமின்றி இறந்தபோது போனிகபூர் ஆறுதலாக இருந்தார். அப்போது அவருடன் நெருக்கம் ஏற்பட்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

* மும்பை சென்ற பிறகும் தமிழ் நடிகர்கள் மீது பாசமாக இருந்தார். அஜித்குமாரை தனது வீட்டுக்கு அழைத்து உபசரித்தார். ஸ்ரீதேவியுடன் இங்கிலீஸ் விங்கிலீஷ் படத்தில் அஜித்குமார் நடித்து இருந்தார்.

* ஸ்ரீதேவி கடைசியாக ‘மாம்’ என்ற இந்தி படத்தில் நடித்து இருந்தார்.

* ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி ‘தடக்’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் அம்மா செல்லம். பட வேலைகள் இருந்ததால் துபாய்க்கு ஸ்ரீதேவியுடன் அவர் செல்லவில்லை. தாய் மறைந்த செய்தி கேட்டு ஜான்வி இடிந்து போய் அழுது கொண்டே இருக்கிறார்.

*துபாயில் திருமணம் முடிந்ததும் போனி கபூர் மும்பை திரும்பி விட்டார். இதனால் ஸ்ரீதேவிக்கு கணவர் அருகில் இல்லையே என்ற வருத்தம் இருந்தது. போனிகபூர் இன்ப அதிர்ச்சி கொடுக்க அவருக்கு தெரியாமலேயே மீண்டும் துபாய் சென்று திருமண வீட்டில் நடந்த நடன நிகழ்ச்சியில் திடீரென்று தோன்றினார். அவரை பார்த்ததும் ஸ்ரீதேவி ஆரத்தழுவி மகிழ்ந்தார். இந்த படம் இணையதளத்தில் பரவி வருகிறது.

* ஸ்ரீதேவி மரணம் அடைந்த செய்தி கேட்டு அவர் பிறந்த ஊரான சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியில் வசிக்கும் மக்கள் துயரப்பட்டனர்.

* ஸ்ரீதேவி வாழ்க்கையை பெங்களூருவில் உள்ள அவரது ரசிகர்கள் ஆவணப்படமாக தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

Next Story