சினிமா செய்திகள்

ஸ்ரீதேவி சுயநினைவிழந்து, குளியலறை தொட்டியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உள்ளார் - துபாய் காவல்துறை + "||" + Sridevi drowned in bathtub following loss of consciousness, says Dubai Police

ஸ்ரீதேவி சுயநினைவிழந்து, குளியலறை தொட்டியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உள்ளார் - துபாய் காவல்துறை

ஸ்ரீதேவி சுயநினைவிழந்து, குளியலறை தொட்டியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உள்ளார் - துபாய் காவல்துறை
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து விசாரணை நடத்த துபாய் அரசு முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Sridevi


புதுடெல்லி,


துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வருவதில் தொடர்ந்து கால தாமதம் நேரிட்டு வருகிறது. உடற்கூறாய்வு முடிந்ததும் தேவையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு இந்தியாவிற்கு நள்ளிரவிற்குள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இன்னும் கால தாமதம் நேரிடும் என இப்போது வெளியாகி உள்ள தகவல்கள் தெரிவிக்கிறது. முன்னதாக அனுமதி வழங்கிய துபாய் போலீஸ் இப்போது துபாய் அரசு வழக்கறிஞரின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மாஜிஸ்திரேட்டிடம் இருந்து அனுமதி பெற்ற பின்னரே சடலம் ஒப்படைக்கப்படும் என இந்திய அதிகாரிகளிடம் போலீஸ் தெரிவித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது.

ஸ்ரீதேவி சுயநினைவிழந்து, குளியலறை தொட்டியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி மரணமடைந்தார் என துபாய் காவல்துறை தெரிவித்து உள்ளது.

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து விசாரணை நடத்த துபாய் அரசு முடிவு செய்து உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஸ்ரீதேவி மரணம் அடைந்த இடத்தில் விசாரணை நடப்பதாகவும், நேரில் பார்த்தவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது வழக்கமான நடைமுறைதான் எனவும் கூறப்படுகிறது.