சினிமா செய்திகள்

உடல்நிலை பற்றி வதந்தி “நான் நலமாக இருக்கிறேன்” -நடிகர் விஷால் + "||" + I am fine - actor Vishal

உடல்நிலை பற்றி வதந்தி “நான் நலமாக இருக்கிறேன்” -நடிகர் விஷால்

உடல்நிலை பற்றி வதந்தி
“நான் நலமாக இருக்கிறேன்” -நடிகர் விஷால்
நான் நலமுடன் இருக்கிறேன் என்று டுவிட்டரில் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
டிகர் விஷால் கடந்த சில நாட்களாக தலைவலியால் அவதிப்பட்டார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று இருப்பதாகவும், அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இதற்கு பதில் அளித்து விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், எனது உடல் நிலை குறித்தும் வதந்திகள் பரவி வருகின்றன. எனது நலம் விரும்பிகள், நண்பர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால் நான் நலமுடன் இருக்கிறேன். ஆரோக்கியத்துடனும், உற்சாகமாகவும் இருக்கிறேன். மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்படவில்லை. சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மார்ச் முதல் வாரத்தில் உங்களை சந்திப்பேன்.”

இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.

விஷால் தற்போது இரும்புத்திரை, சண்டக்கோழி-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இரும்புத்திரை பட வேலைகள் முடிந்து அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. சேவை வரி விவகாரத்தில் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்: நடிகர் விஷாலிடம் நீதிபதி சரமாரி கேள்வி
சேவை வரி விவகாரம் தொடர்பான வழக்கில் நடிகர் விஷால் நேற்று 2-வது முறையாக எழும்பூர் கோர்ட்டில் ஆஜரானார்.
2. 10 முறை சேவை வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியும் ஆஜராகாதது ஏன்? நடிகர் விஷாலுக்கு நீதிபதி கேள்வி
10 முறை சேவை வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியும் ஆஜராகாதது ஏன்? என நடிகர் விஷாலுக்கு பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
3. கேரள வெள்ள சேதத்துக்கு நடிகர் விஷால் ரூ.10 லட்சம் உதவி
கேரள வெள்ள சேதத்துக்கு நடிகர் விஷால் ரூ.10 லட்சம் நிவாரண நிதி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
4. “பாலியல் கொடுமைகளை எதிர்க்கும் கதையில் நடிக்கிறேன்” -நடிகர் விஷால்
விஷால் நடித்து தமிழில் வந்துள்ள ‘இரும்புத்திரை’ படத்தை ‘அபிமன்யுடு’ என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியிடுகின்றனர்.
5. என் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவதா? –நடிகர் விஷால் ஆவேசம்
நடிகர் விஷால்-சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘இரும்புத்திரை’ திரைக்கு வந்துள்ளது. இந்த படத்துக்கு எதிராக தியேட்டர்கள் முன்பு போராட்டங்கள் நடந்தன.