சினிமா செய்திகள்

ரஷிய காதலருடன் திருமணமா?நடிகை ஸ்ரேயா விளக்கம் + "||" + Marry with Russian lover? Actress Shreya interpretation

ரஷிய காதலருடன் திருமணமா?நடிகை ஸ்ரேயா விளக்கம்

ரஷிய காதலருடன் திருமணமா?நடிகை ஸ்ரேயா விளக்கம்
நடிகை ஸ்ரேயாவுக்கும் அவரது ரஷிய காதலருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிகை ஸ்ரேயாவுக்கு 35 வயது ஆகிறது. 17 வருடங்களாக சினிமாவில் நடிக்கிறார். ரஜினிகாந்த் ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்து பிரபலமானார். விஜய், விஷால், தனுஷ், ஜெயம் ரவி ஆகிய பெரிய கதாநாயகர்களுடன் நடித்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 40–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்த கவுதமி புத்ர சாதகர்னி சரித்திர படம் வசூல் குவித்தது. கடைசியாக சிம்புவுடன் நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் திரைக்கு வந்தது. அரவிந்தசாமியுடன் நரகாசுரன் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தற்போது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். 

ஸ்ரேயாவுக்கு திருமணம் முடிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மணமகன் பெயர் ஆண்ட்ரி கோஷெவ். இவர் ரஷியாவில் விளையாட்டு வீரராகவும், தொழில் அதிபராகவும் இருக்கிறார். சமீபத்தில் ஸ்ரேயா ரஷியா சென்று இருந்தபோது ஆண்ட்ரி கோஷெவை சந்தித்தார். இருவரும் நட்பாக பழகி பின்னர் காதல் வயப்பட்டனர். 

ஸ்ரேயா–ஆண்ட்ரி கோ‌ஷவ் திருமணம் வருகிற 19–ந் தேதி உதய்பூரில் இந்து முறைப்படி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமண சடங்குகள் 3 நாட்கள் நடக்கின்றன. திருமணத்துக்கான நகைகள், ஆடைகள் வாங்கும் பணிகளில் ஸ்ரேயா தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். திருமணத்துக்கு பிறகு ஸ்ரேயா கணவருடன் ரஷியாவில் குடியேறப்போவதாகவும், சினிமாவில் இருந்து விலகி விடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

திருமணம் குறித்து ஸ்ரேயாவிடம் கேட்டபோது, ‘‘நான் ஒரு நடிகை. எனது தொழிலான சினிமாவை பற்றி மட்டுமே வெளிப்படையாக பேச முடியும். சொந்த வி‌ஷயங்கள் பற்றி பேச விருப்பம் இல்லை’’ என்றார். திருமணத்தை அவர் மறுக்கவில்லை.