சினிமா செய்திகள்

படமாகும் வாழ்க்கை கதை ஷகிலா வேடத்தில் இந்தி நடிகை + "||" + The film is a Hindi actress in the role of Shakila

படமாகும் வாழ்க்கை கதை ஷகிலா வேடத்தில் இந்தி நடிகை

படமாகும் வாழ்க்கை கதை ஷகிலா வேடத்தில் இந்தி நடிகை
படமாகும் வாழ்க்கை கதையில் ஷகிலா வேடத்தில் இந்தி நடிகை நடிக்க உள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு பட உலகில் கவர்ச்சியாக நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்து இருந்தவர் ஷகிலா. மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் படங்களை ஷகிலா படங்கள் வசூலில் வீழ்த்திய சம்பவங்கள் உண்டு. இவர் படங்கள் ஓடிய தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அரைகுறை உடையில் தோன்றும் போஸ்டர்களும் வீதியெங்கும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தின.


தற்போது தமிழ், கன்னட படங்களில் சிறுசிறு வேடங்களில் ஷகிலா நடித்து வருகிறார். அவரது வாழ்க்கை கதை சினிமா படமாக தயாராகிறது. இந்திரஜித் லங்கேஷ் இந்த படத்தை இயக்குகிறார். இதில் ஷகிலா வேடத்தில் நடிக்க பொருத்தமான நடிகையை தேடி வந்தனர். தற்போது இந்தி நடிகை ரிச்சா சத்தாவை ஷகிலாவாக நடிக்க தேர்வு செய்துள்ளனர்.

படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும் தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் படமாகி வருகிறது. ஏற்கனவே மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை த டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் படமானது. அதில் சில்க் ஸ்மிதாவாக வித்யாபாலன் நடித்து இருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.