சினிமா செய்திகள்

நடிகை ஸ்ரீதேவியின் 16ம் நாள் சடங்கு நிகழ்ச்சியில் நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் அஞ்சலி + "||" + THALA AJITH AND SHALINI PAY RESPECTS TO LEGEND SRIDEVI

நடிகை ஸ்ரீதேவியின் 16ம் நாள் சடங்கு நிகழ்ச்சியில் நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் அஞ்சலி

நடிகை ஸ்ரீதேவியின் 16ம் நாள் சடங்கு நிகழ்ச்சியில் நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் அஞ்சலி
நடிகை ஸ்ரீதேவியின் 16ம் நாள் சடங்கு நிகழ்ச்சியில் நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை,

தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) கடந்த பிப்ரவரி 24-ம் தேதி  துபாயில் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் மரணமடைந்தார்.

முதலில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது பின்னர், உடற்கூறு ஆய்வில் அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருந்ததாகவும், அதனால் மயங்கி தவறுதலாக குளியல் தொட்டியில் மூழ்கி இறந்ததாக என கூறப்பட்டது. அனைத்து விசாரணைக்கு பிறகு கடந்த பிப்ரவரி 27-ம் தேதி இரவு நடிகை ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டுவரப்பட்டது.


அம்பானியின் தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்பட்ட ஸ்ரீ தேவியின் உடல் முதலில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. பின்பு மும்பை செலிபிரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமா மற்றும் இந்திய சினிமாவில் பல திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் ஸ்ரீதேவிக்கு 16ம் நாள் சடங்கு சிஐடி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் திரையுலகினர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...