சினிமா செய்திகள்

விக்ரம் மகன் ஜோடியாக கவுதமி மகள் நடிக்கிறாரா? + "||" + Gauthami's daughter to pair with Vikram's son?

விக்ரம் மகன் ஜோடியாக கவுதமி மகள் நடிக்கிறாரா?

விக்ரம் மகன் ஜோடியாக கவுதமி மகள் நடிக்கிறாரா?
நடிகர் விக்ரம் மகன் துருவ், நடிகை கவுதமி மகள் சுப்புலட்சுமி ஆகிய இருவரும் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்திய ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் தயாராகிறது. பாலா டைரக்டு செய்கிறார்.

இந்த படத்தில்தான் துருவ்-சுப்புலட்சுமி கதாநாயகன்-கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். இந்த படத்தில் துருவ் நடிப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. இதற்காக அவர் பாலா அறிவுரைப்படி தாடியும் நிறைய முடியும் வளர்த்து தோற்றத்தை மாற்றி இருக்கிறார். நடிப்பு, நடன பயிற்சிகளும் பெற்று வருகிறார்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளனர். இந்த படத்துக்கு கதாநாயகி யார் என்பது முடிவாகாமல் இருந்தது. கடந்த சில மாதங்களாக கதாநாயகி தேர்வு நடந்து வந்தது. சில்லுனு ஒரு காதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக வந்த ஷ்ரியா சர்மாவை பரிசீலித்தனர். பின்னர் அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்த ஷாலினி பாண்டே பெயர் அடிபட்டது. தற்போது கவுதமி மகள் சுப்புலட்சுமியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக இணையதளத்தில் தகவல் வெளியானது.

இதற்கு நடிகை கவுதமி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில், ‘எனது மகள் சுப்புலட்சுமி நடிக்கப்போவதாக வெளியான செய்தியைப் பார்த்து அதிர்ந்தேன். இப்போது சினிமாவில் நடிக்கும் முடிவில் அவர் இல்லை. படிப்பில் கவனம் செலுத்துகிறார். வாழ்த்தியவர்களுக்கு நன்றி’ என்று நடிகை கவுதமி கூறியுள்ளார். 

ஆசிரியரின் தேர்வுகள்...