சினிமா செய்திகள்

என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி 2 முதல்-மந்திரிகள் வாழ்க்கை கதை தெலுங்கில் படமாகிறது + "||" + NTR Ramaraj, Rajasekara Reddy 2 First Ministers Life story is shot in Telangana

என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி 2 முதல்-மந்திரிகள் வாழ்க்கை கதை தெலுங்கில் படமாகிறது

என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி 2 முதல்-மந்திரிகள் வாழ்க்கை கதை தெலுங்கில் படமாகிறது
என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி ஆகிய 2 முதல்-மந்திரிகளின் வாழ்க்கை கதை தெலுங்கில் படமாக உள்ளது.
மறைந்த ஆந்திர முதல்-மந்திரிகள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி ஆகியோர் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. என்.டி.ராமராவ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர். தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

பின்னர் ஆந்திர முதல்-மந்திரி ஆனார். இவரது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க குடும்பத்தினர் முன்வந்துள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. நடிகர்-நடிகை தேர்வு நடக்கிறது.


ராஜசேகர ரெட்டி, காங்கிரஸ் கட்சியில் இருந்து முதல்-மந்திரியாக தேர்வானவர். அவர் ஆந்திராவில் நடத்திய ஊர்வலம் பரபரப்பாக பேசப்பட்டது. 2009-ல் அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் திடீரென மாயமானது. பின்னர் கர்னூரில் இருந்து 40 மைல் தொலைவில் உள்ள ருத்ர கொண்ட மலை உச்சியில் அந்த விமானம் உடைந்து கிடந்தது.

ராஜசேகர ரெட்டி உள்பட அவருடன் பயணித்த 5 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன. என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி இருவரும் ஆந்திராவில் வலிமையான தலைவர்களாக இருந்தனர். இவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை படமாக்குகின்றனர். இதில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வருடம் இரு படங்களையும் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.