சினிமா செய்திகள்

சுருதிஹாசனுக்கு பதிலாக நடிக்கிறேனா? - திஷா பதானி விளக்கம் + "||" + Instead shruti hassan acting Description of Disha Badani

சுருதிஹாசனுக்கு பதிலாக நடிக்கிறேனா? - திஷா பதானி விளக்கம்

சுருதிஹாசனுக்கு பதிலாக நடிக்கிறேனா? - திஷா பதானி விளக்கம்
சுந்தர்.சி இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகும் சரித்திர படம் சங்கமித்ரா. ரூ.300 கோடி செலவில் தயாரிக்கின்றனர். பாகுபலி படத்துக்கு இணையாக கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகின்றன.
இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க சுருதிஹாசனை தேர்வு செய்து இருந்தனர். ஜெயம்ரவி, ஜீவா, ஜெய், சிவா, கேத்தரின் தெரசா, நிக்கிகல்ராணி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பாகுபலியைபோல் இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுக்க திட்டமிட்டு உள்ளனர். இதில் நடிப்பதற்காக வெளிநாட்டில் வாள் சண்டை பயிற்சி பெற்று திரும்பிய சுருதிஹாசன் திடீரென்று அந்த படத்தில் நடிக்க முடியாது என்று வெளியேறிவிட்டார். மறுப்புக்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. இதனால் படம் கைவிடப்பட்டு விட்டது என்று பரவிய தகவலை சுந்தர்.சி மறுத்து படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றார்.


சுருதிஹாசனுக்கு பதிலாக கிரிக்கெட் வீரர் டோனி வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான டோனி படத்தில் நடித்துள்ள திஷா பதானியை தேர்வு செய்தனர். இந்த படத்தில் நடிப்பது குறித்து திஷா பதானி கூறும்போது, “சங்கமித்ரா படத்தில் நான் யாருக்கு பதிலாகவும் நடிக்கவில்லை. அந்த படத்தில் இருந்து சுருதிஹாசன் வெளியேறிய காரணத்தை கூட நான் கேட்கவில்லை. அவர் மூத்த நடிகை. சுருதி ஏன் வெளியேறினார் என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்” என்றார்.