சினிமா செய்திகள்

நகைச்சுவை நடிகர் முனிஷ்காந்த் திருமணம் + "||" + comedian actor Munishkanth is married

நகைச்சுவை நடிகர் முனிஷ்காந்த் திருமணம்

நகைச்சுவை நடிகர் முனிஷ்காந்த் திருமணம்
நகைச்சுவை நடிகர் முனிஷ்காந்த்-தேன்மொழி திருமணம் சென்னை வட பழனி முருகன் கோவிலில் நடந்தது.
பிரபல நகைச்சுவை நடிகர் முனிஷ்காந்த் ராமதாஸ். இவர் ‘முண்டாசுபட்டி’ படத்தில் நடித்து பிரபலமானார். குலேபகாவலி, வேலைக்காரன், மரகத நாணயம், போங்கு, மாநகரம், டார்லிங், பசங்க-2, 10 எண்றதுக்குள்ள, ஜிகர்தண்டா உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கிறார். தற்போது சண்டக்கோழி-2 படத்தில் நடிக்கிறார். விசுவாசம் படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

முனிஷ்காந்துக்கும், தேன்மொழிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்கள் திருமணம் நேற்று சென்னை வட பழனியில் உள்ள முருகன் கோவிலில் நடந்தது. திருமணத்தில் நகைச்சுவை நடிகர்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.