சினிமா செய்திகள்

வில்லனுக்கு குரல் கொடுக்கும் வில்லன் + "||" + The villain who speaks to the villain

வில்லனுக்கு குரல் கொடுக்கும் வில்லன்

வில்லனுக்கு குரல்  கொடுக்கும் வில்லன்
மார்வெல்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்பாக கருதப்படும் ‘அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்’ திரைப்படம், இந்தியாவில் ஏப்ரல் 27–ந் தேதி வெளியாக இருக்கிறது.
உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தில், 22 சூப்பர் ஹீரோக்கள் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு சரிசமமான வில்லன்களும் இடம்பெறுகிறார்கள். அந்த வில்லன்களுக்கு எல்லாம் தலைவனாக ‘தோன்ஸ்’ என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறார்கள். இந்த ‘தோன்ஸ்’ பலசாலி, திறமைசாலி, படுபயங்கரமானவன், அயன்மேனையே துவம்சம் செய்யக்கூடியவன், கேப்டன் அமெரிக்காவை அசால்டாக அடக்கிவிடுபவன்.... அப்படி.. இப்படி என பலவிதமான கதைகள் இணையத்தை சுற்றிக்கொண்டிருக்கின்றன.


ஹாலிவுட்டின் பலசாலி வில்லனாக உருவெடுத்திருக்கும் ‘தோன்ஸ்’ வேடத்தில் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் வரிசை திரைப்படங்களில் நாயகன் வின் டீசல் நடிப்பதாக அரசல் புரசலாக பேசிக்கொள்கிறார்கள். அந்த வி‌ஷயத்தை மார்வெல்ஸ் நிறுவனமும் ரகசியமாக பாதுகாத்து வருகிறது. அது உண்மையோ, பொய்யோ தெரியவில்லை. ஆனால் தோன்ஸ் சம்பந்தமான உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஒன்று வந்திருக்கிறது.

அதாகப்பட்டது.., ‘அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்’ திரைப்படத்தின் தெலுங்கு படத்தில், ஹாலிவுட் வில்லனான தோன்ஸிற்கு, டோலிவுட்டின் ‘பாகுபலி’ பட வில்லனான ராணா டகுபாதி குரல் கொடுத்திருக்கிறார். ‘பாகுபலி’ திரைப்படத்தில் வில்லனாக மிரட்டியதால், ராணாவிற்கு இந்த வாய்ப்பு கிடைத் திருக்கிறதாம்.