சினிமா செய்திகள்

“உலகை சுற்றி வருவது எனக்கு பிடிக்கும்” -நடிகை திரிஷா + "||" + I like to visit around the world   - Actress Trisha

“உலகை சுற்றி வருவது எனக்கு பிடிக்கும்” -நடிகை திரிஷா

“உலகை சுற்றி வருவது எனக்கு பிடிக்கும்” -நடிகை திரிஷா
படங்களில் ஓய்வில்லாமல் நடிக்கும் திரிஷா வெளிநாடுகளுக்கும் அடிக்கடி சுற்றுப்பயணம் சென்று விடுகிறார்.
சுற்றுலா செல்வது குறித்து திரிஷா அளித்த பேட்டி வருமாறு:-

“சுற்றுப்பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஏதாவது ஒரு ஊருக்கோ அல்லது நாட்டுக்கோ கிளம்பி விடுவேன். நியூயார்க் எனக்கு விருப்பமான சுற்றுலா தளம். அங்கு நிறைய தடவைகள் போய் இருக்கிறேன். துபாய், லண்டன், நியூயார்க் ஆகியவை ஷாப்பிங் செய்ய சிறந்த இடங்கள்.

நான் நிறைய பொருட்களை வாங்கி இருக்கிறேன். வெளியே போகும்போது ஒரு சூட்கேசுடன் செல்வேன் திரும்பி வரும்போது என் பின்னால் நிறைய சூட்கேஸ் கியூவில் வரும். அந்த அளவுக்கு பொருட்களை வாங்கி குவித்து இருப்பேன். இதுவரை ஷாப்பிங் செய்தவற்றில் மிகவும் சிறந்ததாக நான் கருதுவது சுவிஸ் வாட்ச். வெனிஸ் சென்றபோது இதை வாங்கினேன்.

சாகச பயணங்கள், பங்கி ஜம்ப், ஸ்கை டைவிங் போன்றவைகளும் எனக்கு பிடித்தமானவை. வீட்டில் இருக்கும்போது ஓய்வு கிடைத்தால் பீச் அல்லது மலைபிரதேசங்களுக்கு சென்று விடுவேன். சுற்றுலா செல்லும்போது உணவு கட்டுப்பாடு இருக்காது. விரும்பிய எல்லாவற்றையும் சாப்பிடுவேன். அப்போது நிறைய நடந்து செல்ல வேண்டி இருப்பதால் சரியாகிவிடும்.

சமீபத்தில் நெதர்லாந்து சென்று வந்தேன். அங்குள்ள மலர் தோட்டங்களை சுற்றிப்பார்த்தேன். பூக்களை பார்த்தபோது மனது பஞ்சுபோல் லேசாக மாறியது. வெளிநாட்டு பயணங்களை முடித்து விட்டு மனசு நிறைய புத்துணர்ச்சியோடு திரும்பி இருக்கிறேன். அதன்பிறகு படப்பிடிப்புகளில் உற்சாகமாக கலந்து கொள்வேன்.”

இவ்வாறு திரிஷா கூறினார்.