சினிமா செய்திகள்

ஜெய்-அஞ்சலி விரைவில் திருமணம்? + "||" + Jai-Anjali is getting married soon

ஜெய்-அஞ்சலி விரைவில் திருமணம்?

ஜெய்-அஞ்சலி விரைவில் திருமணம்?
ஜெய்-அஞ்சலி காதல் விவகாரம் தமிழ் பட உலகில் மீண்டும் பரபரப்பாகி உள்ளது.
ஜெய்-அஞ்சலி இருவரும் எங்கேயும் எப்போதும் படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் பற்றிக்கொண்டது. பலூன் என்ற படத்திலும் சேர்ந்து நடித்தார்கள். தனிமையில் அடிக்கடி சந்திப்பதும், நட்சத்திர ஓட்டல்களில் ஜோடியாக விருந்து சாப்பிடுவதுமாக காதலை வளர்த்தனர்.

இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு காதலை உறுதிபடுத்தி வந்தனர். அதன்பிறகு அஞ்சலி தெலுங்கு படங்களில் அதிகமாக நடிக்க தொடங்கியதால் அவர்கள் சந்திப்பது குறைந்தது. அதுவே நாளடைவில் பிரிவை ஏற்படுத்தியது. இருவரும் தகராறு செய்து காதலை முறித்துக்கொண்டதாக கூறப்பட்டது.

தற்போது ஜெய் பார்ட்டி, ஜருகண்டி படங்களில் நடிக்கிறார். மேலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. அஞ்சலி காளி படத்தில் விஜய் ஆண்டனியுடனும் தமிழ், மலையாளத்தில் தயாராகி உள்ள பேரன்பு படத்தில் மம்முட்டியுடனும் நடித்துள்ளார். நாடோடிகள்-2 படத்திலும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் மேலும் இரண்டு படங்களுக்கும் ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஜெய் பிறந்தநாளன்று அஞ்சலி தனது சமூக வலைத்தளத்தில், “உங்களுடையை சிறப்பான இந்த நாளில் அனைத்து சந்தோஷங்களும் கிடைக்கட்டும்” என்று வாழ்த்தினார். ஜோடியாக இருக்கும் படத்தையும் வெளியிட்டார். இதன்மூலம் இருவருக்கும் இடையிலான காதல் மீண்டும் துளிர்த்துள்ளது என்கின்றனர்.

ஜெய்-அஞ்சலி திருமணத்துக்கு தயாராவதாகவும் நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இந்த ஆண்டு இறுதியில் அவர்கள் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.