சினிமா செய்திகள்

ஜோதிகா-விதார்த்துடன் ‘காற்றின் மொழி’ + "||" + kaatrin mozhi movie

ஜோதிகா-விதார்த்துடன் ‘காற்றின் மொழி’

ஜோதிகா-விதார்த்துடன் ‘காற்றின் மொழி’
ராதாமோகன் டைரக்ஷனில் ஜோதிகா மீண்டும் நடிக்கிறார்.
நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட ஜோதிகா, சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். 2 குழந்தைகளுக்கு தாயான பின், அவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். ‘36 வயதினிலே,’ ‘மகளிர் மட்டும்,’‘நாச்சியார்’ஆகிய படங்களில் நடித்த அவர், அடுத்து ராதாமோகன் டைரக்ஷனில் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.

ராதாமோகன் டைரக்ஷ னில், ‘மொழி’என்ற படத்தில் ஜோதிகா ஏற்கனவே நடித்து இருந்தார். அந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதுடன், ஜோதிகாவுக்கு நல்ல பெயரையும், பல விருதுகளையும் பெற்றுக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து சில வருட இடை வெளிக்குப்பின், ராதாமோகன் டைரக்ஷனில் ஜோதிகா மீண்டும் நடிக்கிறார்.

வட மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடிய ‘துமாரி சுலு’என்ற இந்தி படத்தை தழுவிய கதை, இது. இந்தி படத்தில், வித்யாபாலன் கதாநாயகியாக நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக மானவ் கவுல் என்ற இளம் கதாநாயகன் நடித்து இருந்தார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில், நேகா நடித்திருந்தார். இந்த மூன்று பேரை சுற்றி கதை பின்னப்பட்டு இருந்தது.

ஒரு ரேடியோ ஸ்டேஷனில் ஆர்.ஜே.வாக பணிபுரியும் வித்யாபாலன் வாழ்க்கையில் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களே திரைக்கதையாக அமைந்திருந்தது. அவருடைய கணவராக மானவ் கவுல் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக வித்யாபாலனுக்கு பல விருதுகள் கிடைத்தன. அவர் நடித்த கதாபாத்திரத்தில், தமிழ் படத்தில் ஜோதிகா நடிக்கிறார். அவருடைய கணவராக விதார்த் நடிக்கிறார். நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். இவர், தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகள் ஆவார்.

‘போப்டா’ நிறுவனத்துக்காக ஜி.தனஞ்செயன், இந்த படத்தை தயாரிக்கிறார். படத்தின் பெரும்பகுதி காட்சிகள், சென்னையில் உள்ள ‘ஹலோ எப்.எம்.’ஸ்டேஷனில் படமாக்கப்பட உள்ளன.

இந்த படத்துக்கு,‘ காற்றின் மொழி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. ‘காற்றின் மொழி’ படத்தில் சிறப்பு விருந்தினராக சிம்பு!
‘காற்றின் மொழி’ படத்தில், ஒரு சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்து இருக்கிறார்.
2. ஜோதிகாவை பாராட்டிய தயாரிப்பாளர்கள்!
ஜோதிகா கடந்த வாரம் கடுமையான காய்ச்சல் மற்றும் இருமலினால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
3. ‘‘நயன்தாராவை பார்த்து வியக்கிறேன்’’–ஜோதிகா
நயன்தாரா தமிழ் பட உலகில் நம்பர்–1 இடத்தில் இருக்கிறார். முன்னணி கதாநாயகிகளாலும் அவரது மார்க்கெட்டை சரிக்க முடியவில்லை.
4. ஜோதிகா, நயன்தாரா, திரிஷாவுடன் சமந்தாவும்...!
தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகிகள் ஜோதிகா, நயன்தாரா, திரிஷா.