சினிமா செய்திகள்

கர்நாடக அரசியலை கலக்கும் நடிகைகள் ரம்யா, பூஜா காந்தி + "||" + Carnatic politics shuffling Actresses Ramya and Pooja Gandhi

கர்நாடக அரசியலை கலக்கும் நடிகைகள் ரம்யா, பூஜா காந்தி

கர்நாடக அரசியலை கலக்கும் நடிகைகள் ரம்யா, பூஜா காந்தி
நடிகைகள் ரம்யா, பூஜா காந்தி ஆகியோர் கர்நாடக அரசியலில் கலக்கி வருகின்றனர்.

தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி ஆகிய படங்களில் நடித்துள்ள கன்னட நடிகை ரம்யா கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2013-ல் மாண்டியா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு அதே தொகுதியில் நடந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் தோல்வி அடைந்தார். தற்போது காங்கிரஸ் தொழில் நுட்ப பிரிவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.


பிரபு சாலமன் இயக்கிய கொக்கி படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமான பூஜா காந்தி, சரத்குமாருடன் வைத்தீஸ்வரன், அர்ஜுன் ஜோடியாக திருவண்ணாமலை படங்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் 2012-ல் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார்.

பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி கர்நாடக ஜனதா கட்சியில் இணைந்தார். அந்த கட்சியிலும் நீடிக்காமல் பி.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அந்த கட்சி சார்பில் ரெய்ச்சூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் அரசியலை விட்டு விலகி சினிமாவில் தீவிரமாக நடித்து வந்தார். இந்த நிலையில் பூஜா காந்தி தற்போது மீண்டும் தேவகவுடாவின் ஜனதா தளம் கட்சியில் சேர்ந்துள்ளார். கர்நாடக அரசியலை இரண்டு நடிகைகளும் கலக்கி வருவதாக கூறுகின்றனர்.