சினிமா செய்திகள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தில் நடிக்கிறார் விஜய்சேதுபதி + "||" + Vijay Sethupathi will star in Karthik Subbaraj-Rajinikanth’s film

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தில் நடிக்கிறார் விஜய்சேதுபதி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தில் நடிக்கிறார் விஜய்சேதுபதி
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். #VijaySethupathi #Rajinikanth
சென்னை,

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஜூன் 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது.  ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த '2.0', படமும் வெளியிட்டுக்காக காத்திருக்கிறது. இதற்கிடையில், பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி', 'மெர்க்குரி' ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் ரஜினி நடிக்கிறார். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். 

ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக அப்படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  விஜய் சேதுபதி ரஜினியுடன் நடிக்கும் முதல் படம் என்பதால் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...