சினிமா செய்திகள்

குறைந்த வயது பெண்ணை மணந்ததாக விமர்சிப்பதா?-வில்லன் நடிகர் மிலிந்த் சோமன் + "||" + Villan actor Milind Soman

குறைந்த வயது பெண்ணை மணந்ததாக விமர்சிப்பதா?-வில்லன் நடிகர் மிலிந்த் சோமன்

குறைந்த வயது பெண்ணை மணந்ததாக விமர்சிப்பதா?-வில்லன் நடிகர் மிலிந்த் சோமன்
பிரபல வில்லன் நடிகர் மிலிந்த் சோமன். பையா, அலெக்ஸ் பாண்டியன், பச்சைக்கிளி முத்துச்சரம், வித்தகன் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
மிலிந்த் சோமனுக்கும், அசாமை சேர்ந்த அங்கிதா கொன்வருக்கும் சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் 4 வருடங்களாக காதலித்து பின்னர் திருமணம் செய்துகொண்டனர்.

மிலிந்த் சோமனுக்கு 52 வயது ஆகிறது. ஆனால் அங்கிதா கொன்வர் 26 வயது நிரம்பியவர். இதனால் இவர்கள் திருமணம் விமர்சனத்துக்கு உள்ளானது. மகள் வயது பெண்ணை மணப்பதா? என்று சமூக வலைத்தளங்களில் பலர் கருத்துக்கள் பதிவிட்டனர்.

இவர் 2006-லேயே பிரெஞ்சு நடிகையை மணந்து 3 வருடத்திலேயே அவரை விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக திருமணம் செய்துகொண்ட மிலிந்த் சோமனும், அங்கிதா கொன்வரும் தேனிலவை கொண்டாடி வருகிறார்கள். இயற்கையை பாதுகாப்பது அவசியம் என்று டுவிட்டரில் கருத்து பதிவிட்டு மரக்கன்றுகளும் நட்டு வருகிறார்கள். மரக்கன்று நடும் படத்தை சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டு உள்ளனர்.

மகள் வயது பெண்ணை மணந்ததாக தொடர்ந்து வரும் விமர்சனங்களால் மிலிந்த் சோமன் வருத்தத்தில் இருக்கிறார். இதற்கு பதில் அளித்துள்ள அவர், “வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்துள்ளதாக குறை சொல்கிறார்கள். வயது பிரச்சினை இல்லை. எங்கள் காதல் பற்றி மற்றவர்களுக்கு தெரியாது. உண்மையான காதல்தான் வாழ்க்கை. அது எங்களிடம் இருக்கிறது” என்றார்.