சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் + "||" + In the production of Sivakarthikeyan Aishwarya Rajesh

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்ததில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார். ஆர்வத்தை நிறைவேற்றும் விதமாக, அவர் ஒரு புதிய படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். அந்த படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை.

நடிகர் சிவகார்த்திகேயன் சொந்தமாக இந்த படத்தை தயாரிக்கிறார். படத்தில் கதாநாயகன் கிடையாது. ஐஸ்வர்யா ராஜேசின் அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார். இதில், பெண்கள் கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நடிகர்-நடிகைகளும் நடிக்கிறார்கள்.

அருண்ராஜ் காமராஜ் டைரக்டு செய்கிறார். 70 சதவீத படப்பிடிப்பு திருச்சி மற்றும் தஞ்சையில் நடைபெற்றது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது.