சினிமா செய்திகள்

விஷால் வில்லனாக நடிக்க ஆசைப்பட்ட படம் + "||" + Vishal desired movie villain role

விஷால் வில்லனாக நடிக்க ஆசைப்பட்ட படம்

விஷால் வில்லனாக நடிக்க ஆசைப்பட்ட படம்
விஷால்-சமந்தா ஜோடி நடித்து, மித்ரன் டைரக்டு செய்துள்ள ‘இரும்புத்திரை’, மிக விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இரும்புத்திரை படத்தில் விஷால்-சமந்தாவுடன், சக்தி வாய்ந்த வில்லன் வேடத்தில் அர்ஜுன் நடித்து இருக்கிறார்.

அர்ஜுன் வில்லனாக நடித்தது எப்படி? என்பது பற்றி டைரக்டர் மித்ரன் கூறியதாவது:-

‘‘முதலில், இந்த படத்தை வேறு ஒரு கதாநாயகனை வைத்து எடுப்பது என்றும், விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பது என்றும் முடிவு செய்திருந்தோம். விஷாலிடம் கதை சொன்னபோது, ‘‘அந்த வில்லன் வேடத்தில் நானே நடிக்கிறேன்’’ என்றார். அவ்வளவு கனமான வேடம், அது.

நான்தான் விஷாலை வற்புறுத்தி கதாநாயகனாக நடிக்க வைத்தேன். சமந்தா கதாபாத்திரம் பற்றி இப்போது கூற முடியாது. ‘சஸ்பென்ஸ்’ ஆன கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.

சமூக வலைதளங்களினால் ஏற்படும் பாதிப்பை பற்றி பேசும் படம், இது.’’