சினிமா செய்திகள்

டாப்சியின் தங்கை கதாநாயகி ஆகிறார் + "||" + Tapi's sister is heroine

டாப்சியின் தங்கை கதாநாயகி ஆகிறார்

டாப்சியின் தங்கை கதாநாயகி ஆகிறார்
டாப்சியின் தங்கை கதாநாயகி ஆக உள்ளார்.

ஆடுகளம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் பட உலகில் பிரபலமானவர் டாப்சி. வந்தான் வென்றான், காஞ்சனா-2, வைராஜா வை படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு இந்தி திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். பிங்க், நாம் சபானா இந்தி படங்கள் மூலம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டும் பெற்றுள்ளார்.


டாப்சிக்கு ஷாகன் பன்னு என்ற தங்கை இருக்கிறார். இவர் 2016-ல் நடந்த இந்திய அழகி போட்டியில் பங்கேற்றவர். ஷாகன் பன்னுவும் நடிக்க வருகிறார். இதற்காக நடிப்பு, நடனங்களை கற்கிறார். தங்கைக்காக டாப்சி கதை கேட்டு வருவதாகவும் விரைவில் புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகமாவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

சினிமா வாய்ப்பு பிடிப்பதற்காக ஷாகன் பன்னு நீச்சல் உடையில் இருப்பது போன்ற தனது கவர்ச்சி படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த படம் வைரலாகி வருகிறது.