சினிமா செய்திகள்

நடிகை சோனம் கபூர், ரூ.173 கோடி பங்களாவில் குடியேறுகிறார் + "||" + Actress Sonam Kapoor, to settle at Rs .173 crore bungalow

நடிகை சோனம் கபூர், ரூ.173 கோடி பங்களாவில் குடியேறுகிறார்

நடிகை சோனம் கபூர், ரூ.173 கோடி பங்களாவில் குடியேறுகிறார்
தொழில் அதிபரை மணக்கும் நடிகை சோனம் கபூர், ரூ.173 கோடி பங்களாவில் குடியேற உள்ளார்.

நடிகர் தனுஷ் ஜோடியாக ‘ராஞ்சனா’ படத்தில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமான இந்தி நடிகை சோனம் கபூருக்கும் தொழில் அதிபர் ஆனந்த் அஹூஜாவுக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளது. வருகிற 8-ந் தேதி மும்பையில் இவர்கள் திருமணம் நடக்கும் என்று குடும்பத்தினர் அறிவித்து உள்ளனர்.


மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் தம்பியும், பிரபல இந்தி நடிகருமான அனில்கபூரின் மகள்தான் சோனம் கபூர். ஸ்ரீதேவி மறைவு காரணமாக திருமணத்தை எளிமையாக நடத்த திட்டமிட்டு உள்ளனர். சோனம் கபூர் மணக்கும் ஆனந்த் அஹூஜா டெல்லியை சேர்ந்தவர் என்பதால் அங்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

ஆனந்த் அஹூஜா ஏற்றுமதி தொழில்களில் கொடி கட்டி பறக்கும் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபரான ஹரிஷ் அஹுராவின் பேரன். ஆனந்த் அஹூஜாவுக்கு டெல்லியில் உள்ள லுட்யன்ஸ் பகுதியில் 3 ஆயிரத்து 170 சதுர அடியில் ஆடம்பர பங்களா வீடு உள்ளது. இதன் மதிப்பு ரூ.173 கோடி ஆகும். இந்த வீட்டில்தான் சோனம் கபூர் குடியேறப்போகிறார். இந்தியாவின் பெரிய தொழில் அதிபர்களின் வீடுகள் இந்த பகுதியில்தான் உள்ளன.

மும்பை ஜுஹூ பகுதியில் அமைந்துள்ள இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் பங்களாவான ஜல்சாவின் மதிப்பு ரூ.160 கோடிதான். ஷாருக்கானின் பங்களாவான மன்னத்தின் மதிப்பு ரூ.200 கோடி. நடிகர் அக்‌ஷய்குமார் வீட்டின் மதிப்பு ரூ.80 கோடி. மும்பை ஜுஹு கடற்கரை அருகே அமைந்துள்ள நடிகை ஷில்பா ஷெட்டியின் பங்களாவான கினாராவின் மதிப்பு ரூ.100 கோடி. அமீர்கான் குடும்பத்துடன் தங்கி உள்ள பெல்லா விஸ்டா அபார்ட்மென்ட் ரூ.60 கோடியும், நடிகை கங்கனா ரணாவத் வசிக்கும் பங்களா ரூ.30 கோடியும் மதிப்பு கொண்டவை.