சினிமா செய்திகள்

இந்த வருடம் அதிக படங்களில் நயன்தாரா + "||" + This year Nayantara in most films

இந்த வருடம் அதிக படங்களில் நயன்தாரா

இந்த வருடம் அதிக படங்களில் நயன்தாரா
நயன்தாரா இந்த வருடம் அதிக படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு பட உலகில் நயன்தாராவின் மார்க்கெட் உச்சத்திலேயே இருக்கிறது. 2005-ல் ‘ஐயா’ படம் மூலம் தமிழுக்கு வந்து 13 வருடங்களாக நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். அவருக்கு பிறகு மலையாளம், தெலுங்கு, இந்தியில் இருந்து எத்தனையோ நடிகைகள் கோடம்பாக்கம் வந்து இறங்கியும் நயன்தாரா கோட்டையை அசைக்க முடியவில்லை.

அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்து விட்டார். இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார். நானும் ரவுடிதான் படத்தில் காதுகேளாத பெண்ணாகவும், நீ எங்கே என் அன்பே படத்தில் பயங்கரவாத கணவனை கொலை செய்யும் பெண்ணாகவும், அறம் படத்தில் சமூக அவலங்களை சாடும் துணிச்சலான கலெக்டராகவும் திறமை காட்டினார்.

கடந்த வருடத்தில் அவரது நடிப்பில் 3 படங்கள் திரைக்கு வந்தன. இந்த வருடம் அதிக படங்கள் கைவசம் வைத்துள்ளார். இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா, விசுவாசம், தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய 5 படங்களில் நடித்து வருகிறார். நேற்று சிவகார்த்திகேயன் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஏற்கனவே வேலைக்காரன் படத்தில் ஜோடியாக வந்த இவர்கள் மீண்டும் சேர்ந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்க ராஜேஷ்.எம் இயக்குகிறார். சம்பளத்தையும் ரூ.5 கோடியாக உயர்த்தி விட்டார் என்கின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. ‘‘நயன்தாராவை பார்த்து வியக்கிறேன்’’–ஜோதிகா
நயன்தாரா தமிழ் பட உலகில் நம்பர்–1 இடத்தில் இருக்கிறார். முன்னணி கதாநாயகிகளாலும் அவரது மார்க்கெட்டை சரிக்க முடியவில்லை.
2. நயன்தாராவை திருமணத்துக்கு வற்புறுத்திய ரசிகர்கள்
நயன்தாராவுடன் சேர்ந்து விக்னேஷ் சிவன் எடுத்த ‘செல்பி’ வைரலாகியுள்ளது.
3. 3 நாட்களில், ரூ.9 கோடி வசூல்!
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 4 புதிய படங்கள் திரைக்கு வந்தன. அந்த படங்களில் நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படமும் ஒன்று.
4. நயன்தாரா சம்பளம் ரூ.4 கோடி
நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. “உலகம் என்ன பேசினாலும் கவலை இல்லை” - நயன்தாரா
நயன்தாராவும் டைரக்டர் விக்னேஷ் சிவனும் காதலிக்கிறார்கள். இருவரும் ஜோடியாக சுற்றும் படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.